சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு பூனை குளத்தில் மீன் பிடிக்கும் வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், கரையில் அமர்ந்திருக்கும் ஒரு பூனை தனது கால்களால் தண்ணீரைத் தட்டி சத்தம் எழுப்புகிறது.
அதை ஏதோ உணவு என்று தவறாக நினைத்து மீன் அருகே வந்தவுடன், பூனை மின்னல் வேகத்தில் அதைப் பிடித்துவிடுகிறது. பூனையின் இந்த அபாரமான புத்திசாலித்தனத்தைப் பார்த்த பலரும், “விலங்குகளுக்கு இவ்வளவு மூளை இருக்கிறதா?” என்று வியந்து பாராட்டி வருகின்றனர்.
(X) தளத்தில் பகிரப்பட்ட இந்த 10 வினாடி வீடியோ, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பூனையை ஒரு “திறமையான மீனவர்” என்று நெட்டிசன்கள் வர்ணித்து வரும் நிலையில், இந்த வீடியோவின் பின்னணியில் ஒரு சுவாரசியமான உண்மை ஒளிந்துள்ளது.
He is a highly skilled fisherman! 🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/67lsC4HOEg
— LAnDo NIFFIRG™️🇨🇦 (@llandoniffirg) December 27, 2025
“>
உண்மையில், இது நிஜமாக எடுக்கப்பட்ட வீடியோ அல்ல; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வீடியோவாகும். பார்ப்பதற்கு அச்சு அசலாக உண்மை போலவே இருப்பதால், இது இணையத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
