கென்யாவில் ஒரு யானை எதிர்பாராத விதமாக தனது தந்தத்தில் தனது தும்பிக்கையை மாட்டிக்கொண்டு, உயிருக்குப் போராடிய நிலையில் வனவிலங்கு மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட அரிதான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தும்பிக்கையால் தந்தத்தைத் தடவிப் பார்த்தபோது, எதிர்பாராத விதமாகத் தும்பிக்கை தந்தத்திற்குள் துளைத்து சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அந்த யானை சுமார் மூன்று நாட்களாக உணவோ நீரோ உட்கொள்ள முடியாமல் தவித்துள்ளது.

இதனால் யானை மிகவும் பலவீனமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை மற்றும் கென்யா வனவிலங்கு சேவை அமைப்பினர் உடனடியாக விரைந்து வந்து அதை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புக் குழுவினர் முதலில் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி, அதன் தும்பிக்கையைத் தந்தத்திலிருந்து மிகவும் கவனமாக விடுவித்தனர். தும்பிக்கையில் ஏற்பட்ட காயங்களுக்குத் தகுந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

“>

மேலும் சுமார் 40,000 தசைநார்கள் கொண்ட தும்பிக்கை ஒரு யானையின் உயிர்வாழ்விற்கு மிக முக்கியமான உறுப்பாகும் அது சிக்கியதால் ஏற்பட்ட அசாதாரணமான சூழலில் இருந்து யானை காப்பாற்றப்பட்டது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் மீட்புக் குழுவினரின் இந்த விரைவான மற்றும் சாதுர்யமான செயலைப் பாராட்டி வருகின்றனர்.