தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் வேலு பிரபாகரன். இவருக்கு 68 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் 12:30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நாளைய மனிதன், கடவுள், ஒரு இயக்குனரின் காதல் டைரி, அதிசய மனிதன் போன்ற பல படங்களை இயக்கியுள்ள நிலையில் சரியான ஜோடி மற்றும் புதிய ஆட்சி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். மேலும் இவரது மறைவுக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.