பிரபல இயக்குனரும் நடிகருமான வேலு பிரபாகரன் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு 68 வயது ஆகிறது. வேலு பிரபாகரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 12.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் உயிரிழந்தார்.

இவர் நாளைய மனிதன், கடவுள், ஒரு இயக்குனரின் காதல் டைரி, அதிசய மனிதன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர். அது மட்டும் இல்லாமல் சரியான ஜோடி, புதிய ஆட்சி உள்ளிட்ட திரைப்படங்களிலும் வேலு பிரபாகரன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரது இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.