தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு லிட்டில் ஜான் என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஹீரோவாக அமெரிக்க நடிகர் பென்ட்லி மிட்சம் நடித்திருந்தார். ஒரு அமெரிக்க நடிகர் தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்தது இந்த படத்தில் தான். அதன் பின்பு பென்ட்லி வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?.

இவரது முழு குடும்பமே சினிமா குடும்பமாகும். அதாவது பென்ட்லி சகோதரர் கியான், சகோதரிகள் ஜெனிஃபர், கேரிங் ஆகியோரும் நடிகர்கள் தான். இவரது தந்தை மற்றும் தாய் கூட நடிகர் தான். அது மட்டுமின்றி பென்ட்லியின் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என ஒட்டுமொத்த குடும்பமும் பாலிவுட் சினிமாவில் அங்கம் வகித்துள்ளனர். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். இதில் முதல் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் இவருக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் அவரது மூத்த மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திலேயே இறந்து விட்டார். அவரது மூத்த மகள் காதல் பிரச்சினையால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் பெரும் துயர்வில் இருந்தார். தனது மக்களின் இறப்பை நினைத்து மன உளைச்சலில் இருந்த பென்ட்லி தனது உயிரை மாய்த்துக் கொள்ளவும் நினைத்திருக்கிறார்.

ஆனால் இசை மீது கவனத்தை திருப்பி தானே ஆல்பம் எழுதி இசை அமைத்திருக்கிறார். இசை தான் தன் உயிரை காப்பாற்றி உள்ளது என்று கூறிய பெனிட்லி தற்போது முழுக்க முழுக்க படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இசை மீது கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சாக்லேட் பாயாக இருந்த பெனிட்லி தற்போது ரக்கார்ட் பாயாக மாறியுள்ளார்.