இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற 61 ரன்கள் வித்தியாசத்திலான அபார வெற்றியின் போது, ஹர்திக் பாண்டியா மற்றும் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஆகியோருக்கு இடையேயான ஒரு சுவாரசியமான நிகழ்வு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
மேலும் களத்தில் ஃபர்ஹானை நோக்கி ஹர்திக் பாண்டியா வீசிய அந்த “ஐசி ஸ்டேர்” எனப்படும் கூர்மையானப் பார்வை, கிரிக்கெட் ரசிகர்களிடையே வர்ணிக்கப்படுகிறது. ஹர்திக்கின் இந்த மிரட்டலான உடல்மொழி மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறை, இந்திய அணியின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததோடு, ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானின் விக்கெட்டுகளை வரிசையாகச் சரித்து ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவின் அந்தப் பார்வை, ஒரு போர்வீரனைப் போன்ற அவரது தன்னம்பிக்கையை பறைசாற்றியது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் இருக்கும் வழக்கமான விறுவிறுப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் ஒரு முக்கியத் தகவலாக மாறியுள்ளது.
