சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது குமுறலை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த ரசிகர் தனது அணியின் மோசமான ஆட்டத்தைக் கண்டு தேம்பித் தேம்பி அழுவதைக் காண முடிகிறது.
மேலும் “வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் சகஜம், ஆனால் மைதானத்தில் குறைந்தபட்ச போராட்டத்தைக் கூட வெளிப்படுத்தாமல் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தது தான் வேதனையளிக்கிறது” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்த ரசிகர்கள், வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
A viral Pakistani fan, Saud Jarwari, crying after India crushed them so badly. 🥶💥#INDvsPAK https://t.co/RVZqPFBOOH pic.twitter.com/3S3QO6YRSn
— cricketplusmeme (@cricketplusmem_) February 15, 2026
“>
அந்த வீடியோவில் பேசிய ரசிகர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போது, “எங்களுடைய உணர்வுகளுடன் விளையாடாதீர்கள் குறைந்தபட்சம் ஒரு போட்டியைப் போலவாவது ஆடுங்கள்” என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். வீரர்களின் அர்ப்பணிப்பு இல்லாத ஆட்டம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை உடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அணியில் மாற்றங்கள் தேவை என்பதையும் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.
