கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், இளைஞருக்கும் கடந்த 2007 ஆம் வருடம் திருமணம் நடந்தது. நன்கு சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது சில நாட்களுக்குப் பிறகு, கணவன் கறுப்பாக இருந்ததால் அவர் மனைவி துன்புறுத்த ஆரம்பித்தாள். இதைத் தாங்க முடியாமல் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தன் மனைவி தன் மீது பொய் வழக்குகள் போட்டதாகக் கூறிய அவர், தனக்கு விவாகரத்து வழங்குமாறு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், கணவரை நிறம், ஜாதி காரணம் காட்டி துன்புறுத்துவது கொடுமையாக கருதி அந்த தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.