இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு நிறுவனத்தின் இருமல் மருந்தை பயன்படுத்தக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சளி, இருமல் வராமல் தடுப்பதற்காக ‘கோல்ட் அவுட்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள டானிக்கை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது  ஏனெனில் அதில்  வரம்பிற்கு மேல் டைதிலீன் மற்றும் எத்திலீன் கிளைகோல் உள்ளதாக கூறப்டுகிறது.

சென்னையைச் சேர்ந்த ஃபோர்ட்ஸ் லேபரட்டரிஸ் ஈராக்கில் உள்ள டாபிலைஃப் பார்மா நிறுவனத்திற்காக இதை தயாரித்தது. குறிப்பாக குழந்தைகள் இந்த சிரப்பை பயன்படுத்தினால் கடுமையான நோய் ஏற்பட்டு உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.