இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. தற்போது உள்ள சூழலில் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர் சேர்க்கை சிரமமின்றி சுமுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது அசோகரியத்தை சந்திக்க கூடாது என முன்பே அறிவுறுத்தப்பட்டது.

சில பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆதார் அட்டை சமர்ப்பிக்கும் படி பெற்றோரிடம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்துவதாக புகார் அளித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை இல்லாமல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.