இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பலவிதமான வசதிகளை செய்கிறது. பொதுவாகவே ரயில்வே பயணிகள் குறுகிய தூர பயணங்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது கிடையாது. ஜெனரல் டிக்கெட் மூலமாக பயணம் செய்கின்றனர். தற்போது ஜெனரல் டிக்கெட்டில் பயணம் செய்பவர்களுக்கு ரயில்வே புதிய வசதியை வழங்கியுள்ளது. அதாவது முன்பதிவு செய்யப்படாத ஜெனரல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான சிறப்பு செயலியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலமாக பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெற வேண்டிய அவசியம் இருக்காது. பயிர் வருவதற்கு முன்பாக கவுண்டரில் டிக்கெட் எடுப்பவர்கள் இனி அதிக நேரம் நிற்க வேண்டாம். ரயில்வே தொடங்கியுள்ள புதிய வசதியில் பயனாளிகளுக்கு இந்த பிரச்சனை எதுவும் இருக்காது. முதலில் ரயில்வேயில் ஜெனரல் டிக்கெட் முன்பதிவு செயலியான UTSஎன்ற செயலியை உங்கள் ஃபோனில் பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் தகவலை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளலாம். உங்களின் மொபைல் எண் மற்றும் பிற விவரங்களை நிரப்ப வேண்டியிருக்கும். பின்னர் உங்களின் மொபைல் எண்ணில் ஓடிபி கிடைத்தவுடன் அதனை உள்ளிட்டு நீங்கள் பதிவு செய்யலாம்.

இந்திய ரயில்வே செயலி மூலமாக ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் போனசை பெற முடியும். 15 ரூபாய்க்கு பதிலாக 30 ரூபாய் செலவழிக்க வேண்டும். இந்த செயலி மூலமாக குறைந்த கட்டடத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜெனரல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுப்பதற்கும் விதிகள் உள்ளது. ஒருவர் அதிகபட்சமாக 199 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டும் என்றால் டிக்கெட் வாங்கிய 180 நிமிடங்களில் ரயிலில் ஏற வேண்டும். ஆனால் ஒரு பயணி 200 கிலோமீட்டர் க்கு மேல் பயணிக்க வேண்டி இருந்தால் மூன்று நாட்களுக்கு முன்பு ஜெனரல் டிக்கெட் வாங்க வேண்டும் என்ற விதியும் உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.