இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர எல்லா பழக்கவழக்கங்களும் மாறிவிட்டது என்றே சொல்லாலும். அந்தவகையில் சிலர் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க டேட்டிங் ஆப்ஸை நாடுகிறார்கள். ஆனால், ஒரு இளம்பெண் ஒரு பலகை மூலம் வித்தியாசமாக வாழ்க்கை துணையை தேடுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த கரோலினா, ஒரு நல்ல கணவன் அமைய ‘கணவனைத் தேடுகிறேன்’ என்று பலகையில் எழுதி சாலைகளில் சுற்றி வந்தார்.

கடந்த காலங்களில் சில நண்பர்களுடன் தான் நட்பாக இருந்த போதிலும், அவர்களில் யாரையும் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். இதனை தொடர்ந்து அவள் அப்படி நடந்து கொண்டிருந்தபோது, ​​30 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு நபர் அவளிடம் வந்து, அவர்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டனர்.