தற்கொலை விகிதங்களை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாராசிட்டமால் அடங்கிய மருந்துகளின் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது. தேசிய சுகாதார சேவையின்படி, இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 5,000க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்குள் தற்கொலை விகிதங்களைக் குறைக்கும் நோக்கத்தில் பாராசிட்டமால் மற்றும் பாராசிட்டமால் அடங்கிய மருந்துகளின் விற்பனை கட்டுப்படுத்தப்படுகிறது.

இவை ஓவர்-தி-கவுன்டர் மருந்துகளின் பட்டியலில் உள்ளன. 2018 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் நடத்திய ஆய்வில், தற்கொலைக்கு முயன்றவர்களில் பெரும்பாலானவர்கள் பாராசிட்டமால் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டது. இது ஆபத்தான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.