டோலி குளோனிங் ஆட்டை உருவாக்கிய குழுவை வழி நடத்திய பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில்முட் (79) இன்று காலமானார். குளோனிங் ஒரு உயிரினத்தை மரபியல் ரீதியில் அப்படியே உருவாக்குவது. உயிரினும் மூலக்கூறுகள் மற்றும் உயிரணுக்கள் போன்றவற்றை மூதாதையிலிருந்து உருவாக்கும் செயல் முறையாகும். இப்படி குளோனிங் முறையில் ஆட்டை உருவாக்கி அறிவியல் துறையில் மாபெரும் புரட்சி செய்த அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.