விழுப்புரம் மாவட்டத்தில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றியவர் கூறியதாவது, ” கட்சியின் நலனுக்காக எங்கு கூட்டம் நடைபெற்றாலும் உடல் நலம் சரியில்லாத போதும் கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்து கலந்து கொள்கிறேன். இந்த கட்சியின் உயிர்நாடியே தொண்டர்கள்தான்.

தொண்டர்கள் தான் மனித தெய்வங்கள். கடந்த 31 ஆண்டுகளாக இந்த கட்சியை காப்பாற்றி வருபவர்கள் அவர்கள் தான் இன்றைக்கு நான் இந்த கட்சி இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும் அவர்கள்தான். அறக்கட்டளை என்ற பெயரில் அவைத்தலைவராக இருந்து கொண்டு முறைகேடு செய்து கட்சிக்கு துரோகம் செய்தவர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து கொண்டு என்னை பற்றி இழிவாக பதிவு போடுகிறார்கள். ஏனென்று கேட்டால் ஆம் அப்படித்தான் பேசினேன் என்று கூறுகிறார்கள் மதிமுகவை அளிக்க வேண்டும் என்ற சக்தியுடன் வந்துள்ளீர்களா?. நான் எனது மகன் துறை வைகோவை கட்சிக்கு வர வேண்டாம் எனக் கூறினேன்.

அதன் பிறகு தான் கட்சியில் உள்ள செயலாளர்கள் கூட்டம் கூட்டி வாக்கெடுப்பு நடத்தியதில் பெரும்பான்மையான வாக்குகளை துறை வைகோ பெற்றதால் தற்போது அவர் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். ஆனால் வைகோவும்  வாரிசு அரசியலை செய்கிறார் என்ற பழி சொல்லுக்கு ஆளாகியுள்ளேன்.

பல போராட்டங்களை நடத்தி நாட்டில் வெற்றி கண்டேன். நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நின்று உள்ளேன்.ஆனால் இங்கு உள்ளவர்கள் நான் பாஜகவுடன் பேசுகிறேன். எனது மகனுக்கு மந்திரி பதவி பெற முயற்சி செய்து வருகிறேன் என்றெல்லாம் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

உறுதியாக திராவிட இயக்கத்தில் இருப்போம் என்று அதையே கூறுகிறேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி தமிழகத்திற்குள் எந்த இந்துத்துவா சக்தியும் வரக்கூடாது என கடந்த தேர்தலில் முடிவு செய்ததை இன்றும் அதையே தான் செய்கிறோம். வரும் செப்டம்பர் மாதம் திருச்சியில் மாநில மாநாடு நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.