விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2. 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைகாரன் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 எடுக்க முடிவு செய்தார். சமீபத்தில் இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று , மாங்காடு மூவிஸ் நிறுவனம் வழக்கு பதிவு செய்திருந்தது.  இருப்பினும் பலத்தடைகளையும் தாண்டி விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன்-2’ படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழை காட்டிலும் இப்படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக ஆந்திராவின் ராஜமுந்திரிக்கு சென்ற விஜய் ஆண்டனி, அங்கு சில பிச்சைக்காரர்களுக்கு உணவளித்துள்ளார். அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று தன் கையால் உணவு பரிமாறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.