கடக ராசி அன்பர்களே,

இன்று நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களுக்கு வேண்டியவற்றையும் செய்து கொடுப்பீர்கள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வரவை காட்டிலும் செலவு கூடிவிடும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் சூழல் உள்ளது. நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்று அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

மக்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் ஆதரவை பெறுவீர்கள். உயர்வான எண்ணம் மேலோங்கும். கடினமான சூழலை நீங்கள் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்கால நலன் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறவுகள் பலப்படும். இன்று பொன்னான நாளாக அமையும். பெண்களுக்கு முன்னேற்றமான வாழ்க்கை அமையும். திருமணம் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.

பெண்கள் இந்த நாளை அற்புதமாக கொண்டாடுவீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். விளையாட்டு துறையில் சாதிப்பீர்கள். முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டு. இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்