சிம்ம ராசி அன்பர்களே,

இன்று எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகமாக இருக்கும். கண்டிப்பாக உழைப்பால் முன்னேற முடியும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் உங்களுக்கு திருப்தியை கொடுக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கிவிடும்.

நீண்ட நாட்களாக திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும். மாற்று மதத்தினர் கை கொடுத்து  உதவுவார்கள். குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று பெண்களுக்கு ஆழ்ந்த சிந்தனை இருக்கும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என சிந்திப்பீர்கள்.

இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும் இன்று மாணவர்கள் துணிந்து எடுக்கும் முடிவுகளால் வெற்றி பெறுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்த முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  : 6 மற்றும் 9

அதிஷ்ட நிறம்  :   பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்