தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் பதவியேற்ற அன்று, மாநில கஜானாவில் பணம் இல்லை, காலியாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கஜானாவில் பணம் இருக்கிறது; கொடுக்க வேண்டும் என்ற மனம் இருந்தால் கொடுக்கலாம்” என்று பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்த பழைய கருத்தை முன்வைத்து, எக்ஸ் (X) தளத்தில் நபர் ஒருவர் வெளியிட்டுள்ள காரசாரமான விமர்சனக் காணொளி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

​அந்தக் காணொளியில் பேசிய நபர், கஜானாவில் பணம் இருக்கும்போது திமுக ஆட்சியில் இருந்தபோது போராடிய தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுக்க ஏன் மனம் வரவில்லை என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் பல நாட்களாகப் பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டிப் போராடியபோது அவர்களுக்குக் கொடுக்க ஏன் மனதில்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவைச் சாடும் இந்த வீடியோவை தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) தற்போது எக்ஸ் தளத்தில் தாறுமாறாக வைரல் ஆக்கி வருகின்றனர்.