இந்தியில் முன்னணி நாயகியாக வலம் வரக்கூடிய கங்கனா ரணாவத் இயக்கி நடித்திருக்கும் படம் “எமர்ஜென்சி”. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நேர்ந்த நிகழ்வுகளை மட்டும் மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இந்திராகாந்தி வேடத்தில் கங்கனா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதி உள்ளார்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகியது. அதன்பின் இப்படத்தின் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் வரும் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.