லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் லோகேஷ் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து படம் டைரக்டு செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது “இப்படம் இருவரின் திரைப் பயணத்திலும் மிகவும் முக்கியமான திரைப்படமாக இருக்கும். லியோ படத்தின் சூட்டிங்கிற்கு பின் இப்படத்தின் பணிகள் துவங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.