நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர்களின் கேள்வியால் அப்செட்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தலின் போதும், அதற்கு முன்னரும் “தாமிரபரணி தண்ணீரை ராதாபுரத்திற்கு கொண்டு வருவேன்” என வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறி அப்பகுதி இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய வாக்குறுதியையே மீண்டும் மீண்டும் அளிப்பதாக அவர்கள் கிண்டல் செய்ததால் பொறுமை இழந்த அப்பாவு, ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்து, “எனக்கு ஓட்டுப் போட்டால் போடுங்க.. இல்லனா போடாதீங்க” எனத் கட் அண்ட் ரைட்டாகப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
மக்கள் பிரதிநிதி ஒருவரே பிரசாரக் களத்தில் இப்படித் துடுக்காகப் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
