இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் ரயில் படிக்கட்டுகளில் தொங்கிய பயணிகளை சில இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக குச்சிகளால் தாக்கினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காகவே அவ்வாறு செய்ததாக கூறினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/DMu3TC9t1Nf/?igsh=Yjk5Z24yYnltbWhx