உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாக வைரலாகியுள்ள ஒரு காணொளியில், காவல் நிலையம் போன்ற இடத்தில் போலீஸ் சீருடை அணிந்த ஒருவர், தோல் பெல்டால் ஒருவரை இரக்கமின்றி அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்தது என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
காணொளியில், பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்து கெஞ்சினாலும், அவர் மீது தாக்குதல் இடைநிறுத்தப்படவில்லை. இந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, ஆக்ரா காவல்துறை சம்பவத்தை பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆக்ரா காவல்துறை, “காணொளியில் காணப்படும் போலீஸ்காரர், உத்தரபிரதேச காவல்துறையைச் சேர்ந்தவர் அல்ல” எனத் தெரிவித்துள்ளது. மேலும், “நமது மாநில காவல்துறையில் கருப்பு தோல் பெல்ட் அணிவது நடைமுறையிலில்லை. அதைவிட முக்கியமாக, அந்த அதிகாரியின் பெயர் பலகையில் உ.பி. காவல்துறை ஹாலோகிராம் இல்லை” என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், உண்மை விரைவில் வெளியாகும் என்றும் ஆக்ரா போலீசார் தெரிவித்துள்ளனர்.
वर्दी के नशे में चूर इस पुलिस वाले को देखिए. देखिए किस बेरहमी के साथ ये युवक को थाने में पीट रहा है, वीडियो आगरा की बताई जा रही है.
pic.twitter.com/BgPa2WF5WR— Priya singh (@priyarajputlive) August 1, 2025
இதற்கு முந்தைய வாரம், உத்தரபிரதேச போலீசாரை தொடர்புடைய மற்றொரு வீடியோ இணையத்தில் பரவியது. அதில், ஓர் இன்ஸ்பெக்டர் ஒருவர் கண் மருத்துவ நிபுணரை மிரட்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
குறிப்பாக, தனது கண்ணாடியை சரிசெய்யச் சென்ற காவல் அதிகாரி ஒருவர், பணம் செலுத்தாமல் பொருட்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கடை உரிமையாளர் பணத்தைக் கேட்டபோது, இன்ஸ்பெக்டர் அவரை திட்டி மிரட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தன.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, காவல்துறையின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
