திருவள்ளூரில் இருந்து அரசு பேருந்து இரவு 8.30 மணிக்கு ஸ்ரீ பெருமந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது சித்த மருத்துவராக வேலை பார்க்கும் ஒரு நபர் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டதும் சித்த மருத்துவர் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தார். அந்த பெண்ணின் சத்தம் கேட்டதும் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தின் இரண்டு பக்க கதவுகளையும் லாக் செய்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சித்த மருத்துவரை பிடித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.