அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் ஒரு மற்றொன்றுடன் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், ஒரு விமான பணியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு, லாகார்டியா விமான நிலையத்தில், ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்ட நிலையில் இருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிஓடு பாதையில் நகர்ந்து வந்த மற்றொரு டெல்டா விமானம், அதே பாதையை நெருங்கிய போது, இரண்டாவது விமானத்தின் இறக்கை, முன்னதாக நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மூக்குப் பகுதியில் மோதியது.

 

விமானம் மிக மெதுவாக நகரும் போது இந்த மோதல் நிகழ்ந்ததனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், மோதலின் தாக்கத்தில், இரண்டாவது விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது எனக் கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.