உத்திர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மது குடித்து தள்ளாடியபடி நடந்து சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லம்புவா காவல் நிலையத்தில் பணியாற்றும் ஷ்யாம் குமார் சிங் என்பவர் ஒரு போலீஸ்காரருடன் ஹெல்மெட் அணியாமல், நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்துள்ளார்.
இருவரும் மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீறி பாதையை கடந்து நடந்து சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியானது. முன்னதாக மது குடித்திருந்த இன்ஸ்பெக்டர் நடக்க முடியாமல் தள்ளாடியபடி ரயில்வே கேட்டை தாண்டி நடந்து சென்றார். அவரை பொதுமக்கள் கண்டித்து இப்படி நடக்க முடியாத நிலைக்கு வந்துட்டீங்க. உங்கள சஸ்பெண்ட் செய்யணும் என கூறியுள்ளனர்.
यूपी के सुल्तानपुर में दरोगा का एक वीडियो वायरल हो गया है, जिसमें वे वर्दी में नशे की हालत में लड़खड़ाते हुए रेलवे ट्रैक पार करते नजर आ रहे हैं. वीडियो में दिख रहा है कि स्थानीय लोगों ने नशे में धुत दरोगा की क्लास लगा दी इस बीच हल्की बहस भी हुई. देखिए#Sultanpur #SultanpurPolice… pic.twitter.com/xUW5mZImmN
— ABP News (@ABPNews) August 1, 2025
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.தற்போது, சம்பவத்தைப் பார்த்து லம்புவா வட்டார காவல் கண்காணிப்பாளர் அப்துல் சலாம், “இந்த நிகழ்வை குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார். அதிகாரிகளின் தவறான நடத்தை மீதான நடவடிக்கையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
