மத்திய பிரதேசம் மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் 450 ரூபாய்க்கு வீட்டு உபயோக சிலிண்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முக்கிய வாக்குறுதிகளை பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் அரசு வழங்கி வருகின்றது. காங்கிரஸ் கட்சியும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்குவதாக முன்பு அறிவித்திருந்த நிலையில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி இறைக்கின்றன.

ஏற்கனவே மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் சிலிண்டருக்கான விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.