புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் மற்றும் பிரார்த்தனை செய்ய காலை 8.45 மணிக்கு பணிக்கு வருவதற்கு பதில் 8.45 மணிக்கு பணிக்கு வரலாம் என்று அரசு சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரண்டு மணி நேரம் பெண் அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் பெண் அரசு ஊழியர்கள் 2 மணி நேரம் தாமதமாக பணிக்கு வரலாம் என்று கூறி தற்போது அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

பெண்களின் பாரம்பரிய பிராத்தனை மற்றும் பூஜை செய்ய சலுகைகள் வழங்கப்படும் என்ற வாக்கியம் நீக்கப்பட்ட வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வருவதில் சிக்கல் உள்ளதாக சிறப்பு அனுமதி தரப்படுகிறது என அரசாணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு இந்த அறிவிப்பு பெண் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.