புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு வயது 19. இந்த மாணவன் தஞ்சாவூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் காலேஜ்க்கு சரிவர செல்லாமல் இருந்ததோடு படிப்பிலும் கவனம் செலுத்தாமல் இருந்தார்.

இது பற்றி பால்ராஜ் தன்னுடைய மகனிடம் கேட்டதோடு கல்லூரிக்கு ஒழுங்காக செல்ல வேண்டும் என கண்டித்துள்ளார். இதனால் மணிகண்டன் மிகவும் மன வேதனை அடைந்து வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே வாலிபர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்படும் நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.