மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளைத் துளியும் மதிக்காமல் ஒரே மோட்டார் சைக்கிளில் 9 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு வாலிபர் ஓட்டும் பைக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 9 பேர் அமர்ந்துள்ளனர். எவ்வித அச்சமும் இன்றி, அதிக பாரத்துடன் அந்தப் பைக் சாலையில் வேகமாகச் செல்வது பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.

​இந்த வீடியோ இணையத்தில் வெளியானதிலிருந்து, அந்த இளைஞரின் பொறுப்பற்ற செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரே ஒரு விநாடி நிலை தடுமாறினாலும் 9 உயிர்களும் ஆபத்தில் முடியும் என்பதால், இது போன்ற அலட்சியமான பயணங்கள் உயிருக்கே உலை வைக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதால், சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.