ராஜஸ்தான் மாநிலம் பீகானேரில் சாக்கடை கால்வாய் ஒன்றில் இருந்து திடீரென 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள், சாக்கடை என்றும் பாராமல் அந்த நோட்டுகளை அள்ளிச் செல்லப் போட்டி போட்டனர். சாக்கடையில் இருந்து எடுக்கப்பட்ட அந்த நோட்டுகளைச் சுத்தமான தண்ணீரில் கழுவி, தங்களது பைக்குகளின் மீது வைத்து மக்கள் காயவைக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த நோட்டுகள் உண்மையானவை தானா என்பதைச் சோதிக்கவும் மக்கள் ஆர்வம் காட்டினர்.
अचानक सीवरेज में बहने लगे 500-500 के नोट, लोगों में मची लूटने की होड़#ATDigital #Rajasthan #VideoVideo pic.twitter.com/cQVQ5PFQ1z
— AajTak (@aajtak) March 1, 2026
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கூட்டத்தைக் கலைக்க லத்தி சார்ஜ் செய்தனர். போலீசார் வருவதைக் கண்ட மக்கள் பணத்துடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். சாக்கடைக்குள் இவ்வளவு பணம் எப்படி வந்தது, இது கறுப்புப் பணமா அல்லது யாராவது வேண்டுமென்றே வீசிச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா காட்சியைப் போல நடந்த இந்தச் சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது.
