விழுப்புரம் அருகே மரகதபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்ற கரும்பு வெட்டும் தொழிலாளி, தனது மனைவி அஞ்சுலட்சத்தைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் தனது ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். இதே பெண்ணுடன் சங்கரின் நண்பர் அன்பு என்பவரும் உறவு வைத்திருந்தார். இதனால், பெண் சங்கரை புறக்கணிக்க, ஆத்திரமடைந்த சங்கர் அவருக்கு தொந்தரவு செய்து வந்தார். இது குறித்து அன்புவிடம் பெண் புகார் கூறியிருந்தார்.

நேற்று முன்தினம் மதுபோதையில் சங்கரிடம் இதைப் பற்றி அன்பு வாக்குவாதம் செய்தார். இதனால் ஏற்பட்ட மோதலில், அன்பு சங்கரின் மர்ம உறுப்பை அறுத்து, வலது கண்ணை தோண்டி எடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயமடைந்த சங்கரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கரின் மனைவி அளித்த புகாரின் பேரில், அன்பு மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். சங்கர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.