சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவர் அமெரிக்காவை சேர்ந்த லஸ்டின் இமானுவேல். டிக் டாக்கில் ஏராளமான ஃபாலோவர்களை கொண்டுள்ள இவர் ஜூலை 31 ஆம் தேதி 10 பெண்களை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான காணொளியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு “இன்று நான் பத்து இளம் பெண்களை திருமணம் செய்தேன். அனைவரும் எனது மனைவிகள்” என குறிப்பிட்டிருந்தார்.

9 வினாடிகள் கொண்ட அந்த காணொளியில் மணப்பெண்கள் ஒன்பது பேர் லஸ்டினை சுற்றி வருவதும் ஒரு மணப்பெண் லஸ்டின் மடியில் அமர்ந்திருப்பதையும் காணலாம். இந்த காணொளியை 5 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஏராளமான ஆபாச காணொளிகள் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளது.