டெல்லியில் இருந்து இன்று (டிச.5) நள்ளிரவு வரை புறப்பட வேண்டிய அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் சுமார் 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
விமான நிறுவனத்தின் செயல்பாட்டுக் காரணங்களால் இந்த திடீர் ரத்து அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு விமானக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் விமான சேவைகள் முழுமையாகச் சீரடையும் எனவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
