குஜராத் மாநிலம் வல்சாத் (Valsad) மாவட்டத்தில், ஒரு காட்டுயிர் தன்னார்வலர் (Wildlife Volunteer), மின் கம்பியில் பட்டு உயிரற்றுப் போன ஒருப் பாம்பிற்குக் ‘வாயோடு வாய் வைத்துச் செயற்கைச் சுவாசம்’ (Mouth-to-Mouth CPR) கொடுத்து உயிர்ப்பித்தச் செயல், சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கியதால் செயலற்றுப் போன அந்தப் பாம்பை, அங்கிருந்த விவசாயிகள் உதவியுடன் மீட்ட முகேஷ் வயாத் என்ற தன்னார்வலர், ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பாம்பின் வாயைத் திறந்துச் செயற்கைச் சுவாசத்தைச் செலுத்தினார்.

 

View this post on Instagram

 

A post shared by India Today (@indiatoday)

சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் பாம்பு மெதுவாக அசைந்து, அருகில் உள்ள காட்டுக்குள் ஊர்ந்து சென்றது. இந்தச் சாகசச் செயல், “தைரியம் மற்றும் இரக்கம்” ஆகியவற்றின் அரிதான கலவையாக உள்ளது என்று இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

“இந்தியாவில் அசாதாரணமான மக்கள் உள்ளனர்” என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முறையானப் பயிற்சி இல்லாமல் யாரும் வனவிலங்குகளை இத்தகைய ஆபத்தான முறையில் மீட்க முயற்சிக்கக் கூடாது என்று வனவிலங்கு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான அபூர்வமானப் பிணைப்பை உணர்த்தியுள்ளது.