இந்தூர் போக்குவரத்துக் காவல்துறையில் மைக்கேல் ஜாக்சன் பாணியில் ‘மூன்வாக்’ நடனமாடி போக்குவரத்தைச் சரிசெய்து, நாடு முழுவதும் புகழ்பெற்ற ரஞ்சித் சிங் தற்போது காவலர் பதவிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021 முதல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தலைமை காவலர் பதவி, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையால் பறிக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலம் ஒருவர், ரஞ்சித் சிங் தனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இந்தூருக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாகவும் ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் காவல்துறை விதிகளுக்கு முரணாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தண்டனை வெறும் பாலியல் புகாருக்காக மட்டும் வழங்கப்படவில்லை; ரஞ்சித் சிங் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்த வீடியோக்கள் காவல்துறைக்குரிய கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கபில் சர்மா ஷோ போன்ற பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மற்றும் லடாக் போலீசாருக்கே பயிற்சி அளிக்கும் அளவுக்குப் புகழ்பெற்ற ரஞ்சித் சிங், தற்போது களப்பணியில் இருந்து நீக்கப்பட்டு ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

“>

 

புகழுக்காகத் தனது எல்லையை மீறிய இந்த ‘நடனக் காவலரின்’ வீழ்ச்சி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.