2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார். மார்ச் 30-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தவெக-வின் வேட்பாளர் பட்டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெறும் வேட்பாளர் பெயர்கள் மட்டுமல்லாமல், அதனுடன் அதிரடியான தேர்தல் அறிக்கையையும் சேர்த்து வெளியிட்டு, தேர்தல் களத்தை இப்போதே தன் பக்கம் திருப்ப தளபதி திட்டமிட்டுள்ளாராம்.

​ஏற்கனவே, விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகளை முடுக்கிவிட புஸ்ஸி ஆனந்த் களமிறங்கியுள்ளார். பெரம்பூரில் பிரம்மாண்டமான தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணியை அவர் தொடங்கி வைத்தது, அந்தத் தொகுதியில் விஜய் போட்டியிடுவதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது. தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே இருப்பதால், புயல் வேகத்தில் பணிகளைச் செய்யத் தொண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தத் திடீர் வேகம், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது