மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காகக் கொண்டு வந்த ‘தாலிக்கு தங்கம்’ மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகக் கொண்டு வந்த ‘இலவச லேப்டாப்’ ஆகிய உன்னதத் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு முடக்கிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், இந்தத் திட்டங்கள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்தவை என்றும், அவற்றைச் செயல்படுத்தாமல் விட்டது ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்றும் மிகக் கடுமையாகச் சாடினார்.
ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு பதவி சுகத்தை அனுபவித்த எடப்பாடி, அவர் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களையே குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக ஓபிஎஸ் ஆவேசமாகப் பேசினார். “அம்மா பெயரைச் சொல்லி ஓட்டு வாங்கிவிட்டு, அவர் ஆசைப்பட்ட திட்டங்களையே சிதைப்பதுதான் எடப்பாடியின் லட்சணமா?” எனக் கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், எடப்பாடியின் இந்த நடவடிக்கை கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அவருக்கு இருக்கும் நற்பெயரை மொத்தமாகச் சிதைக்கும் என்று எச்சரித்தார். ஓபிஎஸ்-ஸின் இந்தத் ‘தாலிக்கு தங்கம்’ மேட்டர் இப்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது
