தமிழக அரசியலே ஸ்தம்பிக்கும் வகையில், திமுகவில் இணைந்த பிறகு அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அதிமுகவில் இருந்தபோது ஈபிஎஸ்-ஸின் ஒவ்வொரு நகர்வையும் அருகில் இருந்து பார்த்த ஓபிஎஸ், “நீ எப்படி இந்த பதவிக்கு வந்தாய்? யாரால் வந்தாய்?” எனத் தொடங்கி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி முதலமைச்சர் பதவியைப் பிடிக்க சசிகலாவின் காலில் விழுந்து, தரைவழியாக ஊர்ந்து சென்ற சம்பவத்தை பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி மேடையிலேயே அதிரடி காட்டினார்.
எடப்பாடி பழனிசாமி செய்வது ‘நன்றியற்ற அரசியல்’ என்று சாடிய ஓபிஎஸ், தன்னை எச்சரிக்க எடப்பாடிக்கு எந்தவித தகுதியும் இல்லை என்று ஆவேசமாகச் சீறினார். பதவிக் காலத்தின் போது நடந்த ரகசிய நிகழ்வுகளை ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி, எடப்பாடியின் அரசியல் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறிதான் என்பது போலப் பேசினார். அதிமுக-வின் அத்தனை பலவீனங்களையும் திமுக மேடையில் ஓபிஎஸ் புட்டுப் புட்டு வைத்தது, எடப்பாடி ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்-ஸின் இந்த ‘நேரடி அட்டாக்’ அதிமுக-வின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கும் வகையில் அமைந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
