இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது 398 ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தில் 12ஜி ஓடிடி தளங்கள் மற்றும் அன்லிமிடெட் சலுகைகளில் வழங்கும் அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது 28 நாட்கள் செல்லுபடி ஆகக்கூடிய இந்த திட்டத்தில் சோனி லைவ், ZEE5, லியாங்கேட் ப்ளே, டிஸ்கவரி+, சன் என்எக்ஸ்டி, Kanchha Lannka, பிளானட் மராத்தி, சௌபால், Hoichoi, டாக்குபே, எபிக் ஆன், ஜியோடிவி ஆப் ஆகிய 12 ஒடிடி சேவைகள், தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய சேவைகளை பெற முடியும். மிகக் குறைந்த கட்டணத்தில் அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் இதனை பெற்று பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.