இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்று பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் வழங்கப்படுகிறது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை தவறுதலாக தொலைத்து விட்டால் அவற்றை மீண்டும் பெற என்ன செய்வது என்று பலரும் தெரியாமல் இருக்கலாம். இது போன்ற நேரத்தில் மின் ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இ-ஆதார் நமது தொலைபேசி மற்றும் மெயில் ஆகியவற்றில் சேமித்துக் கொண்டு தேவைப்படும்போது அவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இதற்கு முதலில் UIDAI இணையதளத்தில் முகப்பு பக்கத்திற்கு சென்று ஆதார் பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது ஆதார் பதிவிறக்கம் செய்ய தேவையான ஆதார் எண் உங்களிடம் இருந்தால் அதற்கான விருப்பத்தை தேர்வு செய்யலாம்.

இல்லையென்றால் பதிவு ஐடியை தேர்வு செய்து அதனை உள்ளிடவும்.

பின்னர் கேட்கப்படும் கேப்சாவை உள்ளிட்டு ஓடிபி பெறலாம்.

ஓடிபி உள்ளிட்ட பிறகு உங்களுடைய ஆதார் பதிவிறக்கம் செய்யப்படும்.

பதிவிறக்கம் செய்த இ ஆதார் பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டு இருக்கும்

உங்களுடைய பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் மற்றும் நீங்கள் பிறந்த வருடம் கடவுச்சொல்லாக இருக்கும்.

இதனை உள்ளிட்டு எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.