இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இரு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகால சேமிப்பு கணக்கிற்கு 7 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாகவும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு வருகின்ற ஜனவரி- மார்ச் காலாண்டில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.