சமூக வலைதளங்களில் விலங்குகள் பழிவாங்கும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது உண்டு. அந்த வகையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள குலிஸ்தான்-ஏ-ஜோஹர் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அங்கு பலி கொடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட பசு மாடு ஒன்று, தன்னை இழுத்துச் சென்ற கசாப்புக் கடைக்காரருக்குப் பாடம் புகட்டும் வகையில் ஆக்ரோஷமாகச் செயல்பட்டுள்ளது.
அந்த நபர் பசுவின் கயிற்றில் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக்கொண்ட நிலையில், அந்த மாடு அவரைச் சாலை முழுவதும் மிகவேகமாக இழுத்துச் சென்றது பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.
கட்டுப்பாட்டை மீறி ஓடிய அந்தப் பசுவை அடக்க அங்கிருந்த நான்கு பேர் முயன்றும் பலனளிக்கவில்லை. பசு வேகமாக ஓடியதால், கயிற்றில் சிக்கியிருந்த அந்த நபர் சாலையில் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.
cow counter attack on butcher pic.twitter.com/Y3hqUZOFJL
— news for you (@newsforyou36351) April 8, 2024
“>
அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. சம்பவ இடத்திலிருந்தவர்கள் எடுத்த மற்றொரு வீடியோவில், பசு இழுத்துச் சென்ற அந்த நபர் சிறிது தூரத்தில் மயக்க நிலையில் கிடப்பதும், அவரது நண்பர்கள் அவரைச் சூழ்ந்து நிற்பதும் தெரிகிறது.
ஒரு விலங்கிடம் காட்டிய அஜாக்கிரதை அந்த மனிதரை உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
