உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகர் பகுதியில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் தெரு நாய் ஒன்றை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய் சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த நபர் தடியால் நாயின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். முதல் அடியிலேயே நாயின் மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது.

சுமார் 5 நிமிடங்கள் வலியால் துடிதுடித்த அந்த நாய், அங்கேயே மயங்கி விழுந்தது. இந்தக் கொடூரமான செயல் அங்கிருந்த கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்த ஒருவரே, இப்படி இரக்கமில்லாமல் நடந்துகொண்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.