டெல்லி பல்கலைக்கழக (DU) மெட்ரோ நிலையத்தில் ஒரு பெண், இளைஞர் ஒருவர் தன்னைத் தவறாகத் தொட முயன்றதாகக் கூறிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறார். அவரை அடிக்கவும், மற்றவர்களைத் தூண்டிவிட்டு கும்பலாக அடிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த இளைஞர் தனது கேமராவைப் பதிவிடத் தொடங்கி, தனது Media ID-யைக் காண்பித்தவுடன் அந்தப் பெண் அப்படியே மாறிவிடுகிறார். மிரட்டல் விடுத்தவர் திடீரென “ஜான், அப்படிச் செய்யாதே” (Jaan, mat karo) என்று கெஞ்சத் தொடங்குகிறார்.



இந்த வீடியோவில் அந்த இளைஞரிடம் அடையாள அட்டையும், கேமராவும் இருந்ததால் அவர் தப்பித்தார். ஒருவேளை எதுவுமே இல்லாத ஒரு சாதாரண மனிதராக அவர் இருந்திருந்தால், அந்தப் பெண்ணின் ஒரு பொய் புகாரால் அவர் சிறைக்குச் சென்றிருப்பார் அல்லது கூட்டத்தால் தாக்கப்பட்டிருப்பார். சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை (Weaponisation of Law) இந்தச் சம்பவம் அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது.