மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா மற்றும் டோம்பிவிலி பகுதிகளில் காவல்துறை அதிகாரி மற்றும் பள்ளி தாளாளரின் மகன் ஆகியோர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அகோலாவில் 80 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிவில் லைன்ஸ் காவல் நிலையக் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரிடம், உதவி ஆய்வாளர் (ASI) ராஜேஷ் ஜாதவ் என்பவர் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by LS Marathi (@lsmarathi)

அந்தப் பெண்ணிடம், “உன் மகளை என்னிடம் அனுப்பி வை; உனக்கு 10,000 ரூபாய் தருவதோடு, இந்த மோசடி வழக்கிலிருந்து உன்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்கிறேன்” என்று அவர் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி ராஜேஷ் ஜாதவ் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், ஜாதவை நேரில் வரவழைத்து கடுமையாகக் கண்டிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

மேலும் இதேபோன்று பள்ளி தாளாளரின் மகன் ஒருவர் ஆசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.