ஜியோ வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் 10 பில்லியன் ஜி பி டேட்டாவை பயன்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.கடந்த 2016 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் நுழைந்தபோது நாட்டில் உள்ள அனைத்து நெட்வொர்க் களிலும் டேட்டா நுகர்வு வெறும் 4.6 எக்ஸாபைட்டுகள் மட்டுமே.

ஜியோ பயனர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 23.1 ஜிபி டேட்டாவை செலவிடுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இது ஒரு மாதத்திற்கு 13.3 ஜிபி மட்டுமே. அதாவது ஒவ்வொரு ஜியோ பயனரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மாதத்திற்கு 10 ஜிபி கூடுதல் டேட்டாவை பயன்படுத்துகிறார்கள்.