உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில், குடும்ப வன்முறையின் உச்சக்கட்ட கொடூரம் ஒன்று அரங்கேறியுள்ளது. திருமணாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால், அதற்குத் தன் மனைவியே காரணம் எனப் பழிசுமத்தி, கணவன் அவளைத் தரையில் தள்ளி கால்களாலும் கைகளாலும் மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார்.

இந்த கொடூரத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின்போது, வீட்டில் இருந்த மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் யாரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியாகி, பார்ப்பவர்களின் நெஞ்சை நடுங்க வைத்துள்ளதுடன், இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது இந்த வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.

மேலும் நெட்டிசன்களின் கடுமையான கொந்தளிப்பைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் கொண்டு குற்றவாளிகள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஹாபூர் மாவட்ட போலீசாருக்கு உத்தரப் பிரதேச மாநில காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.