தென்காசியில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் அவசரத்தால், 70 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சுப்பம்மாள் என்ற அந்த மூதாட்டி, நெல்லைக்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு, வந்த பேருந்தில் ஏறுவதற்கு முயன்றுள்ளார். வயது மூப்பு காரணமாக அவர் மெதுவாகப் படியில் ஏற முற்பட்டபோது, பேருந்தில் ஏறுவதற்காகப் படியில் காலை வைத்த அந்த நொடியே, அவர் முழுமையாக ஏறுவதற்குள் ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறிய மூதாட்டி, பேருந்து படியில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூதாட்டி ஏறும் முன்பே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: பேருந்து படியில் இருந்து கீழே விழுந்த மேட்டூரை சேர்ந்த 70 வயது மூதாட்டி பலி#DinakaranNews | #Tenkasi | #Accident https://t.co/IZLB15wTpL pic.twitter.com/8XnuTVJKcd
— Dinakaran (@DinakaranNews) April 26, 2026
“>
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பேருந்து ஊழியர்களின் இத்தகைய அலட்சியப்போக்கு ஒரு உயிரைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், ஓட்டுநரின் கவனக்குறைவு குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
